கயல் சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு தொடர்… ரசிகர்கள் ஷாக்


சன் டிவி

சீரியல்களின் ராஜாவான சன் டிவியில் நிறைய தொடர்கள் 500, 800, 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் சைத்ரா-சஞ்சீவ் என புதிய ஜோடி இணைய தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல், அப்பாவை இழந்த பெண் தனது குடும்பத்திற்காக போராடும் கதையாக இந்த தொடரின் கதைக்களம் அமைந்தது.

இப்போது எழிலை தொலைத்து கஷ்டப்படும் கயல் வீட்டில் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது. இப்போது தேவி தனது குழந்தையை பிரிந்து கஷ்டப்பட்டு வருகிறார், இதற்கு இடையில் விக்னேஷ் தனது மனைவியை புரிந்துகொண்ட நல்ல விஷயமும் நடந்தது.

அடுத்து சிவசங்கரி ஆட்டம் தொடங்கியுள்ளது, இந்த வாரம் அவர் கயலை பழிவாங்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.

கிளைமேக்ஸ்

5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு கயல் சீரியல் ரசிகர்களே கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபப்பாகும் மேலும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.

அது என்ன தொடர் என்றால், புது வசந்தம் சீரியல் தானாம், விரைவில் இந்த சீரியலும் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *