பிரபல நடிகருடன் கைகோர்த்த நடிகை பிரியங்கா மோகன்..


ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் 29-வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.



ஏஜிஎஸ்



தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ். மதராசபட்டினம், தனி ஒருவன், பிகில், லவ் டுடே, டிராகன், கோட், என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ளனர்.

ஏஜிஎஸ் 29: பிரபல நடிகருடன் கைகோர்த்த நடிகை பிரியங்கா மோகன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Priyanka Mohan Ags 29Th Movie Announcement

இவர்கள் தயாரிப்பில் கடைசியாக வெளியான பிளாஸ்ட் திரைப்படம் மாபெரும் வசூல் செய்து வெற்றிபெற்றது. இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 29-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.


பிரியங்கா மோகன்


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் பிரியங்கா மோகன் நடிப்பில் ஏஜிஎஸ் 29-வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் பிரபல நடிகர் ஜெய்யுடன் இணைந்து பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகி பாபு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சக்ரா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்தன் எம்.எஸ் இப்படத்தை இயக்குகிறார். மேலும் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏஜிஎஸ் 29: பிரபல நடிகருடன் கைகோர்த்த நடிகை பிரியங்கா மோகன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Priyanka Mohan Ags 29Th Movie Announcement



இன்று இப்படத்தின் பூஜா நடைபெற்ற நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *