நயன்தாரா வீட்டில் பி.வி சிந்து.. ஒரே சந்திப்பில் அவர்களை பற்றிய பார்வையே மாறிவிட்டது

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மற்ற மொழி பிரபலங்களும் அவருடன் நட்புடன் இருந்து வருகின்றனர்.

அப்படி பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது நயன்தாராவின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

நயன்தாரா வீட்டில் பி.வி சிந்து.. ஒரே சந்திப்பில் அவர்களை பற்றிய பார்வையே மாறிவிட்டது | Pv Sindhu Dinner At Nayanthara Home

நெகிழ்ச்சியான பதிவு


நயன்தாரா வீட்டுக்கு வந்தது பற்றி பதிவிட்ட பிவி சிந்து, “அழகான மாலை. அருமையான உணவு. மனம் திறந்த உரையாடல்களும் முடிவில்லாத சிரிப்பும்.

ஒரே ஒரு டின்னர் அவர்களை பற்றிய பார்வையே மாற்றிவிட்டது. நண்பர்களாக உள்ளே வந்து, வாழ்க்கை, அன்பு என அனைத்தும் பேசி, போகும்போது ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்தது போல செல்வீர்கள்.

சென்னை எனக்கு வீடு போல. இந்த நாளுக்கு பின், எனக்கு இன்னொரு சிறிய குடும்பம் இங்கே காத்திருக்கிறது. விக்கி மற்றும் நயன், இருவரும் மிக அன்பானவர்கள்.

இவ்வாறு பிவி சிந்து பதிவிட்டு இருக்கிறார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *