வீட்டு வேலைகளில் அலப்பறை செய்யும் ஜீவா.. நடந்தது என்ன? – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
வாகை சூடவா
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் வாகை சூடவா சீரியலில், நேற்றைய எபிசோடில் அப்பத்தா போட்ட கண்டிஷனுக்கு ஜீவா ஓகே சொல்லியிருந்தார்.
இதையடுத்து இன்றைய எபிசோடில் ஜீவாவை வைத்து வீட்டிலுள்ளவர்கள் செமையாக வேலை வாங்கப் போகிறார்கள்.
முதல்ல ஜீவாவிடம் பாத்திரம் கழுவ சொல்ல, குவியலாக கிடக்கும் பாத்திரங்களை பார்த்து அவன் ஷாக்காகிறான். “இவ்வளவு பாத்திரத்தையா நான் கழுவணும்?” என்று புலம்பிக்கொண்டே வேலையை ஆரம்பிக்கிறான்.
அந்த நேரத்தில் அங்கு வரும் தேவி, “இன்னுமா பாத்திரம் கழுவிட்டு இருக்க?” என்று கேட்பதோடு, சரியாக கழுவவில்லை என்றும் குறை சொல்கிறாள். உடனே ஜீவா, “எப்படி கழுவணும்னு சொல்லிக் கொடுங்க” என்று சொல்ல, தேவி ஒரு தட்டை கழுவி காட்டுகிறாள்.
அதை தன்னுடைய அட்வான்டேஜாக எடுத்துக்கொள்ளும் ஜீவா, அடுத்தடுத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் காட்டி எப்படி கழுவணும் என்று கேட்டு, கடைசியில் மொத்த பாத்திரத்தையும் தேவியையே கழுவ வைக்கிறான்.
அதன்பிறகு வீட்டை துடைக்கும் வேலையில் இறங்கும் ஜீவாவை பாண்டி விடாமல் கலாய்க்கிறான். வேண்டுமென்றே ஆங்காங்கே டீயை ஊற்றி அவனுக்கு மேலும் வேலை வைக்க, கடுப்பான ஜீவா கயல் கொடுத்த மாப்பை வைத்து பாண்டியை அடிக்க துரத்துகிறான்.
அடுத்து துணி துவைக்கும் வேலை வர, கயல் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.
ஆனால் அப்பத்தா அதற்கு சம்மதிக்காமல், கையாலேயே துவைக்க வேண்டும் என்று கூறி ஜீவாவை மீண்டும் சிக்கலில் மாட்ட வைக்கிறார்.
இறுதியாக சட்னி அரைக்கும் போது மீனாட்சி ஜீவாவுக்கு உதவி செய்ய, இருவருக்கும் இடையே சிறிய உரசல் ஏற்படுகிறது.
இதையெல்லாம் கயல் மறைந்திருந்து வீடியோவாக பதிவு செய்கிறாள்.
இப்படி ஜீவாவுக்கு அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய வாகை சூடவா எபிசோடில் பார்க்கலாம்.
