எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன்

எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சபரி யார்? அவர் எப்படி திரைத்துறையை தேர்ந்தெடுத்தார்? அதற்கு பின் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

நடிகர் சபரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சபரி பிரசாந்த். தற்போது எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராவணன் மற்றும் சக்திக்கு இடையேயான நடைபெறும் மோதல் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் | Ethirneechal Sabari Prasanth Life And Cinema Dream

இந்த நிலையில், அமைதியாக இருந்து தற்போது மிரட்டலாக நடித்து வரும் நடிகர் சபரி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரியின் வாழ்க்கை

சென்னையில் பிறந்த சபரி சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வமாக இருந்திருக்கிறார். இவருடைய தந்தைக்கும் நடிகராக வேண்டும் என்கிற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. தந்தையை போலவே சபரிக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட, கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலத்திலேயே குறும்படங்கள் மற்றும் இணைய தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சபரி. 

எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் | Ethirneechal Sabari Prasanth Life And Cinema Dream

சின்னத்திரை

இதன்பின், சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தபோதுதான், கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘தறி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு சபரிக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களிடையேயான நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின், எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் நடைபெற்றது. இதில் பல கட்டங்களை கடந்து ஆடிஷனில் இறுதியாக சபரி சக்தி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இது அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் | Ethirneechal Sabari Prasanth Life And Cinema Dream

சின்னத்திரையில் தற்போது ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் சபரி பிரசாந்துக்கு வெள்ளித்திரையில் தடம் பதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இவர் ஒருசில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

திருமணம்

நடிகர் சபரி பிரசாந்த், கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சபரிக்கு திருமணம் ஆன விஷயமே ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் மனைவியுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் | Ethirneechal Sabari Prasanth Life And Cinema Dream

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *