திருவுக்கு உருவாகும் சந்தேகம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் கவிதா.. திருமாங்கல்யத்தில் இன்று!


திருமாங்கல்யம் 

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம்.

கடந்த எபிசோடில், மகாவின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட திவ்யா, காஞ்சனாவிடம் மனம் திறந்து பேச முடிவெடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

திருவுக்கு உருவாகும் சந்தேகம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் கவிதா.. திருமாங்கல்யத்தில் இன்று! | Zee Tamizh Thirumangalyam Serial Latest Episode


இன்றைய எபிசோடில், காஞ்சனா திவ்யாவை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். ஆனால் திவ்யா, “நான் நாளைக்கு வருகிறேன்” என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை காஞ்சனா கேட்க, அலுவலகத்தில் நடந்த தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க சித்தியுடன் செல்ல இருப்பதாக திவ்யா தெரிவிக்கிறார். இதைக் கேட்டு கவிதா அதிர்ச்சியடைகிறார்.


அந்த நேரத்தில் திரு, அலுவலக வேலைகளை பின்னர் கவனிக்கலாம் என்றும், முதலில் வீட்டிற்கு செல்லுமாறும் திவ்யாவிடம் கூறுகிறார். இதையடுத்து திவ்யா, காஞ்சனாவுடன் வீட்டிற்குப் புறப்படுகிறார். மறுபக்கம், அம்பிகா மகாவிடம் மறுநாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.


இதற்கிடையில் திரு, கவிதாவை சந்தித்து அலுவலகத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விசாரிக்கிறார். அனைத்தும் தயாராக இருப்பதாக கவிதா பதிலளிக்கிறார். மேலும், திவ்யா அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியிருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என திரு தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.

திருவுக்கு உருவாகும் சந்தேகம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் கவிதா.. திருமாங்கல்யத்தில் இன்று! | Zee Tamizh Thirumangalyam Serial Latest Episode


பின்னர் திரு ஏற்பாடு செய்த டிடெக்டிவ், அலுவலகத்தில் நடந்த தீ விபத்துக்கும், மகாவை கொலை செய்ய முயன்ற சம்பவத்துக்கும் ஒரே நபர்தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார். இந்த தகவலைக் கேட்டு கவிதா கடும் பதற்றமடைகிறார்.

அதேசமயம், இந்த சம்பவங்களின் பின்னணியில் கௌதம் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் திருவின் மனதில் வலுப்பெறுகிறது.

நிலைமை மோசமாகி வருவதை உணரும் கவிதா, உடனடியாக கௌதமுக்கு போன் செய்து, திரு அனுப்பிய டிடெக்டிவ் உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டதாக எச்சரிக்கிறார்.

அதற்கு கௌதம், “எல்லாவற்றுக்கும் காரணமான மகாவை நான் சும்மா விட மாட்டேன். அவள் என்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டாள்” என்று கோபத்துடன் பேசுகிறான்.

இந்நிலையில் அம்பிகாவும் மகாவும் கோவிலுக்கு வருகிறார்கள். 

அங்கே என்ன நடக்கப்போகிறது? கௌதம் தனது அடுத்த திட்டத்தை செயல்படுத்துவானா? திருவின் சந்தேகம் உண்மையை நோக்கிச் செல்லுமா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய திருமாங்கல்யம் எபிசோடில் தெரியவரும்.

தவறாமல் Zee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு காணுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *