எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?… அவரே பகிர்ந்த தகவல்
எதிர்நீச்சல் தொடர்கிறது
எப்படியோ ஜனனி, ராவணன் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டார்.
தனக்கு எதுவும் தெரியாதவர் போல் வீட்டிற்கு வந்தவர் குணசேகரன் மற்றும் குடும்பத்தினரிடம் சாமி கும்பிட போகிறீர்கள் சரி தான், ஆனால் அதைவிட ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று கூறுகிறார்.
அவர் சொன்னதை கேட்டு வீட்டுப் பெண்கள் செம ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் Vkவை பிடிக்க சக்தியை தேடிவந்த ராவணன் இன்னொரு நேரடியாக மோத களமிறங்கிவிட்டார். இன்றைய எபிசோட் காட்சியில், ராவணன்-சக்தி நேரடியாக சக்திக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
சோக கதை
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சத்யப்ரியா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து செட்டில் ஆனேன். கணவர் தயாரித்த திரைப்படம் மாபெரும் தோல்வியடைய எல்லாம் இழந்துவிட்டேன், திடீரென கணவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
குடும்பத்தைக் காப்பாற்ற சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5 மாதங்கள் ‘வார்டு செக்ரட்டரியாக’ வேலை பார்த்தேன், ஆனால் தொடர முடியவில்லை.
எப்படியாவது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினேன்.
அப்போது கமல்ஹாசனிடம் வாய்ப்பு கேட்டேன், அவர் அட்வான்ஸ் பணம் கொடுத்தார், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக புதிய பாதை படத்தில் வில்லி வேடம் கிடைத்தது, அதன்பிறகு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க ஆரம்பித்தேன் என்றார்.
