என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது… அறந்தாங்கி நிஷா ஓபன் டாக்

என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது… அறந்தாங்கி நிஷா ஓபன் டாக்


அறந்தாங்கி நிஷா

காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பலர் உள்ளனர். ஆனால் பெண் காமெடி நடிகைகள் என்றால் விரல்விட்ட எண்ணக் கூடிய வகையில் தான் சில வருடங்களுக்கு முன் இருந்தனர்.

ஆனால் இப்போது அதிலும் பெண் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா.

என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது... அறந்தாங்கி நிஷா ஓபன் டாக் | Aranthangi Nisha Opens About Her Career Struggle

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்றவர் மாரி 2, ஜெயிலர், கலகலப்பு 2, கோலமாவு கோகிலா, ஆண் தேவதை என பல முன்னணித் திரைப்படங்களில் நடித்தார்.
தொலைக்காட்சி, படங்கள் தாண்டி நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.

நடிகை பேட்டி


தனது சினிமா பயணத்தில் பிஸியாக இருக்கும் அறந்தாங்கி நிஷா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னை பார்க்கும் பலரும் நீ இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் புருஷன் என்று கூறுவார்கள்.

ஆனால் நான் இந்த இடத்திற்கு வருவதற்கும், மேடைகளில் ஏறுவதற்கும் தெருத்தெருவா அசிங்கப்பட்டிருக்கேன்.

என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது... அறந்தாங்கி நிஷா ஓபன் டாக் | Aranthangi Nisha Opens About Her Career Struggle  

பாத்ரூம் வரைக்கும் அவமானம், ஒவ்வொரு மேடையிலும் அடிபட்டு, ரூ. 100, ரூ. 200 சம்பளத்தில் ஆரம்பித்து இன்னைக்கு இந்த அளவுக்கு வந்து நிற்கிறேன் என்றால் அது என்னோட தன்னம்பிக்கை மட்டும்தான் காரணம்.

பல பேர்கிட்ட அசிங்கப்பட்டு, செருப்படிபட்டு இந்த இடத்திற்கு வந்ததற்கு முழுக்க முழுக்க நான் மட்டும்தான் காரணம். என் கணவர் ரியாஸ் கிடையாது, இதை நான் என் புருஷன்கிட்டயே ஓபனா சொல்லியிருக்கேன் என கூறியுள்ளார்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *