பெண்களை இப்படித்தான் காட்டுவதா? டாக்சிக் டிரைலர் குறித்து நடிகை யாஷுக்கு எச்சரிக்கை விடுத்த கன்னட நடிகை

பெண்களை இப்படித்தான் காட்டுவதா? டாக்சிக் டிரைலர் குறித்து நடிகை யாஷுக்கு எச்சரிக்கை விடுத்த கன்னட நடிகை

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தின் டிரைலரில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து கன்னட நடிகை ரிஷிகா சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாக்சிக்

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 26-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

பெண்களை இப்படித்தான் காட்டுவதா? டாக்சிக் டிரைலர் குறித்து நடிகை யாஷுக்கு எச்சரிக்கை விடுத்த கன்னட நடிகை | Rishika Singh Condemed Yash For Toxic Trailer

நடிகையின் கண்டனம்

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து வரவேற்பை பெற்றாலும், கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், கன்னட நடிகை ரிஷிகா சிங் இதுகுறித்து தனது கண்டனத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

பெண்களை இப்படித்தான் காட்டுவதா? டாக்சிக் டிரைலர் குறித்து நடிகை யாஷுக்கு எச்சரிக்கை விடுத்த கன்னட நடிகை | Rishika Singh Condemed Yash For Toxic Trailer

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கன்னட சினிமா உலகளவில் வளர வேண்டும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரைலரில் பெண்களை சித்தரித்துள்ள விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. படத்தில் 5 முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அவர்களில் யாராவது கண்ணியமாகவோ அல்லது அழகாகவோ காட்டியுள்ளார்களா? பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அழைத்து வந்து இப்படித்தான் காட்டுவதா?” என கேட்டுள்ளார்.

யாஷுக்கு எச்சரிக்கை

மேலும், “ஒரு குடும்ப தலைவனாகவும், தந்தையாகவும் இருக்கும் யாஷ், பெண்களை மதிக்கும் விதத்தில் கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால், உங்களை கர்நாடகாவை விட்டு வெளியேற்ற செய்வோம்” என எச்சரித்துள்ளார்.

பெண்களை இப்படித்தான் காட்டுவதா? டாக்சிக் டிரைலர் குறித்து நடிகை யாஷுக்கு எச்சரிக்கை விடுத்த கன்னட நடிகை | Rishika Singh Condemed Yash For Toxic Trailer

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *