பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் பிரபல டான்ஸ் மாஸ்டர்! லேட்டஸ்ட் அப்டேட்

பிக் பாஸ் ஷோ என்றால் அதில் ஒவ்வொரு சீசனம் ஒரு டான்ஸ் மாஸ்டர் நிச்சயம் போட்டியாளராக வருவார். ஷோவில் நடன டாஸ்குகள் அதிகம் இருக்கும் என்பதால் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறார்கள்.
சாண்டி மாஸ்டர், ராபர்ட் மாஸ்டர், மணிசந்திரா, அமீர் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் பிக் பாஸ் பத்தாவது சீசனில் போட்டியாளராக யார் வரப் போகிறார்கள் என்கிற லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாக இருக்கிறது.
ஸ்ரீதர் மாஸ்டர்
இந்த வருடம் ஸ்ரீதர் மாஸ்டர் போட்டியாளராக வர இருப்பதாக தகவல் வந்திருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
அவர் தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






