விக்ரம் வீடியோவால் வெடித்த சர்ச்சை.. வனத்துறை தீவிர விசாரணை

நடிகர் சீயான் விக்ரம் instagramல் நுழைந்த பிறகு அடிக்கடி அவரது போட்டோஷூட் ஸ்டீல்கள் மற்றும் பர்சனல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் ஒரு அரிய வகை குரங்குடன் விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. லார் கிப்பான் என்ற அந்த அரிய வகை குரங்கு வீட்டில் வளர்க்க அனுமதி பெறப்பட்டதா, சட்டப்படி வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதா என பல கேள்விகள் எழுந்ததால் தான் சிக்கல் வெடித்தது.
அதனால் விக்ரம் வீடியோவை நீக்கிவிட்டார்.
விசாரணை
மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரனை தான் நடிகர் விக்ரமின் மகள் திருமணம் செய்து இருக்கிறார். சம்பந்தி வீட்டுக்கு சென்ற நடிகர் விக்ரம் அங்கு தான் அந்த குரங்குடன் விளையாடி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இது பெரிய சர்ச்சையான நிலையில் தற்போது வனத்துறை அதிகாரிகள் இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்.






