விருந்தாளியாக வந்த ஆதி.. அதிர்ச்சியில் ஜீவா, குழப்பத்தில் மீனாட்சி.. வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்!

விருந்தாளியாக வந்த ஆதி.. அதிர்ச்சியில் ஜீவா, குழப்பத்தில் மீனாட்சி.. வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்!


வாகை சூடவா

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா ரசிகர்களுக்கு தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களை கொடுத்து வருகிறது.

நேற்றைய எபிசோடில் அப்பத்தா வீட்டிற்கு முக்கிய விருந்தினர் ஒருவர் வரப்போவதாக அறிவித்த நிலையில், இன்றைய எபிசோடில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.

அப்பத்தா வீட்டில் சிறப்பு விருந்தினர் வருவதால், அவருக்காக தடபுடலான விருந்து தயாரிக்க வேண்டும் என்று மீனாட்சியிடம் கூறுகிறாள்.

விருந்தாளியாக வந்த ஆதி.. அதிர்ச்சியில் ஜீவா, குழப்பத்தில் மீனாட்சி.. வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Episode

அப்பத்தாவின் ஆசையை ஏற்றுக்கொண்ட மீனாட்சியும் முழு உற்சாகத்துடன் சமையல் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள்.

இதையடுத்து ஜீவாவை அழைக்கும் அப்பத்தா, மார்க்கெட்டிற்கு சென்று கறி, மீன், முட்டை உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருமாறு அனுப்புகிறாள். ஜீவாவும் அனைத்தையும் வாங்கி வந்து, மீனாட்சிக்கு சமையலில் உதவியாக கிச்சனில் இறங்குகிறான்.

இதைப் பார்த்த சக்தி மனம் உருகி, “என் கணவர் கூட எனக்காக இப்படி ஒரு நாளும் உதவி செய்ததே இல்லை” என்று கூறி இருவரின் இணக்கத்தை ரசிக்கிறாள்.


ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மீனாட்சியிடம் நெருங்க முயற்சி செய்யும் ஜீவாவுக்கு மீனாட்சி எதிர்பாராத பதிலடி கொடுக்கிறாள். “யார் என்ன சொன்னாலும், நான் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறி அவனது கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள்.


இந்த சூழ்நிலையில் வீட்டிற்கு விருந்தாளியாக வருபவர் வேறு யாருமல்ல, ஆதி! அவனை பார்த்ததும் ஜீவா அதிர்ச்சி அடைகிறான். மீனாட்சியும் “இவன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்?” என்ற குழப்பத்தில் ஆழ்கிறாள்.

விருந்தாளியாக வந்த ஆதி.. அதிர்ச்சியில் ஜீவா, குழப்பத்தில் மீனாட்சி.. வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Episode

வீட்டின் சூழலே ஒரே பதற்றமாக மாறுகிறது.

மீனாட்சிக்கு தன் வரவு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் ஆதி, அதையே ஆயுதமாக்கி ஜீவாவை சீண்ட தொடங்குகிறான்.

அதிலும், “உன் துணை மாப்பிள்ளை ஜீவாதான் மீனாட்சியின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்” என்று குத்தலான பேச்சுகளை பேசி பழைய காயங்களை மீண்டும் கிளறுகிறான்.



ஆதியின் இந்த வருகை வீட்டில் புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமா? ஜீவா மற்றும் மீனாட்சி இடையேயான உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? ஆதியின் அடுத்த நகர்வு என்ன?

பரபரப்பும், உணர்ச்சியும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இன்றைய “வாகை சூடவா” எபிசோடை தவறாமல் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள்! 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *