குக் வித் கோமாளி சீசன் 7 இந்த வார டபுள் எலிமினேஷன்.. அதிர்ச்சி கொடுத்த நடுவர்கள்..

குக் வித் கோமாளி 7
ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இவ்வளவு ரசிகர்களா என அனைவரையும் வியக்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ஒரு பக்கம் சமையல் ஒரு பக்கம் நகைச்சுவை என களைகட்டிய நிகழ்ச்சி கடந்த ஓரிரு சீசன்களாக தடுமாறி வருகிறது.
இந்த குக் வித் கோமாளி சீசன் 7-ல் ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதில் அறந்தாங்கி நிஷா – ரியாஸ், மகேந்திரன் – சாந்தா, மஞ்சுநாதன் – ராஜேஸ்வரி மற்றும் கானா வினோத் – பாக்யா என நான்கு ஜோடிகள் வெளியேறியுள்ளனர்.
மீதமிருந்த நான்கு ஜோடிகளுக்கு போட்டியாக, இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியிட்ட சீனியர்ஸ் பாபா பாஸ்கர், ரம்யா பாண்டியன், உமைர் மற்றும் ஷபானா ஆகியோரை போட்டியாளர்களாக களமிறக்கினார்கள். அதிலிருந்து ஜூனியர் Vs சீனியர் என்கிற முறையில் தான் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
டபுள் எலிமினேஷன்
இந்நிலையில், இந்த வாரம் டபுள் எலிமினேஷன் என நடுவர்கள் அறிவித்தனர். இதில் சீனியரில் இருந்து ஒரு போட்டியாளரும் ஜூனியரில் இருந்து ஒரு போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கேற்றபடி அனைவரும் கடுமையாக போட்டியிட்டனர். நடுவர்களை வியக்கவைக்கும் வகையில் வெளிநாட்டு சாப்பாடுகளை சமைத்து அசத்தினார்கள்.
இருந்தும் சிறந்ததில் சிறந்ததை தேர்ந்தெடுத்து, அதற்கான மதிப்பெண்கள் அடிப்படையில் எலிமினேஷன் நடைபெற்றது.
இதில், ஜூனியரில் இருந்து டிராவிட் – ராஜி ஜோடி வெளியேற, சீனியரில் இருந்து ரம்யா பாண்டியன் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.






