10,000 கோடி வசூல் சாதனை படைக்குமா ‘தி ஒடிசி’? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

10,000 கோடி வசூல் சாதனை படைக்குமா ‘தி ஒடிசி’? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


‘தி ஒடிசி’

2026-ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘தி ஒடிசி’. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

10,000 கோடி வசூல் சாதனை படைக்குமா

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படத்தின் கதையை இயக்குநர் நோலன் உருவாக்கியுள்ளார்.

10,000 கோடி வசூல் சாதனை படைக்குமா

கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த ‘தி ஒடிசி’ முதல் நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், ரசிகர்களின் அமோக வரவேற்பால் வசூல் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது.

15 நாட்கள் வசூல்


இந்நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த 15 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் உலகளவில் 725 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 6,900 கோடி வசூலாகும்.

10,000 கோடி வசூல் சாதனை படைக்குமா

விரைவில் ரூ. 10,000 கோடி வசூல் சாதனையை படைக்குமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‘தி ஒடிசி’ அடுத்து என்னென்ன சாதனைகளை படைக்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *