வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை… சொன்ன திடுக்கிடும் தகவல்

அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்.
4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது உள்ள கதைக்களம் பொறுத்த வரை நிலா-சோழன் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் ஒன்று செய்ய அது கடைசியில் பிரச்சனையாக மாறிவிட்டது.
ஆனால் சோழன் எப்படியோ அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டார், அந்த பணத்தில் வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சியும் வாங்கியுள்ளார்.
நடிகை வேதனை
இந்த அய்யனார் துணை சீரியலில் கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், Casting Couch பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர், நான் நடிக்க தொடங்கிய சமயத்தில் சின்ன ரோலில் நடிக்கக்கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண முடியுமா என கேட்பார்கள், அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவா என்று கேட்பார்கள், நாம் வேண்டாம் என்று சொன்னாலும் மேனேஜர் ஃபோன் செய்து ஓகேவா என கேட்பார். எங்களுக்கு மேலிடத்திலிருந்து கேட்பார்கள் அதை சொல்லத்தான் உங்களிடம் கேட்கிறோம் என்பார்கள்.
நோ சொன்னால் உடனே ஃபோன் வைத்துவிடுவார்கள், வாய்ப்பு இருக்காது என கூறியுள்ளார்.






