ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் இருந்து இத்தனை பிரபலங்கள் விலகிவிட்டார்களா?… ரசிகர்கள் வருத்தம்

ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் இருந்து இத்தனை பிரபலங்கள் விலகிவிட்டார்களா?… ரசிகர்கள் வருத்தம்

ஹார்ட் பீட் 3

கடந்த 2024ம் ஆண்டு ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான வெப் தொடர் தான் ஹார்ட் பீட்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி கேப்ட்ரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் ஆரம்பத்தில் ஜாலியாக தொடங்க அடுத்தடுத்து எமோஷ்னலாக மாறியது.

2 சீசன்களில் அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள்.

கடைசியாக 2வது சீசன் 100 எபிசோடுகளுடன் கடந்த வருடம் நவம்பர் 6ம் தேதி முடிவுக்கு வந்தது. 2வது சீசன் முடிந்த உடனே ரசிகர்கள் 3வது சீசன் எப்போது என்று தான் அதிகம் கேட்டு வந்தவர்.

விலகல்

3வது ஹார்ட் பீட் சீசன் வரப்போகிறது என்ற சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடும் சோக செய்தி வந்த வண்ணம் உள்ளது.

அதாவது 3வது சீசன் வரப்போகிறது என்ற தகவல் வந்ததில் இருந்து நடிகர்களின் விலகல் குறித்த செய்தி தான் அதிகம் வருகிறது. தற்போது ஹார்ட் பீட் 3வது சீசனில் இருந்து நவீன், அனிதா, தேஜு ஆகியோரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *