வெற்றிமாறனின் அடுத்த படம்.. அரசன், தமிழ்முருகனுக்கு அடுத்து இவருடன் தான்

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர். அவர் தற்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார்.\
அடுத்து தனுஷ் நடிக்கும் தமிழ் முருகன் படத்தை அவர் இயக்க போகிறார். மேலும் அவர் ராஜன் வகையறா படத்தையும் இயக்க போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி உடன் கூட்டணி
இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து விஜய் சேதுபதி உடன் ஒரு புது படத்திற்காக கூட்டணி சேர போவதாக தகவல் வந்திருக்கிறது.
கிராமத்து பின்னணியில் இந்த கதை இருக்கும் எனவும், வெற்றிமாறன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தபின் இந்த படம் தொடங்கும் என தகவல் வந்திருக்கிறது.






