‘தர்மேந்திர பிரதான் பதவி விலங்குகள், ராஜினாமா செய்யுங்கள்’.. நடிகை ஜோதிகா வெளியிட்ட அதிரடி பதிவு

‘தர்மேந்திர பிரதான் பதவி விலங்குகள், ராஜினாமா செய்யுங்கள்’.. நடிகை ஜோதிகா வெளியிட்ட அதிரடி பதிவு


நீட் போராட்டம் 

நீட் தேர்வுக்கு எதிராகவும், சமீபத்தில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் கரப்பாண்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.



அதேபோல் சென்னையிலும் மாணவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு திரையுலக பிரபலங்கள் சார்பில் பலரும் தங்களது கருத்துக்களையும், தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

ஜோதிகா பதிவு


இந்த நிலையில், பிரபல நடிகை ஜோதிகா இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “தர்மேந்திர பிரதான் பதவி விலங்குகள்; ராஜினாமா செய்யுங்கள். நான் மாணவர்களுடனும் நமது தேசத்தின் எதிர்காலத்துடனும் துணையாக நிற்கிறேன். நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன், நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன், நான் ஒரு சீர்திருத்த கல்விக்காக நிற்கிறேன்.

சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் தாய்மார்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளை உங்களை போல வளர்க்க விரும்புகிறோம். தடையின்றி வெளிப்படையாக இருக்கும் ஜென் Z தலைமுறையினரே, உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இந்தியா என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி. ஜெய் ஹிந்த்” என என பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *