ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’

ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’


சாமந்தி

குடும்பங்கள் கொண்டாடும் தரமான சீரியல்களை வழங்கி வரும் Zee தமிழ் தொலைக்காட்சி, அடுத்ததாக ‘சாமந்தி’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை ஒளிபரப்பவிருக்கிறது. சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ப்ரீத்தி ஷர்மா, சுர்ஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடர், விறுவிறுப்பான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. பாசம், காதல் மற்றும் எதிர்பாராத பல திருப்பங்களுடன் தயாராகியுள்ள ‘சாமந்தி’ தொடர், வரும் ஜூலை 13 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ - ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்! | Zee Tamil New Serial Chamanthi

கதையின் சுருக்கம்


ஒரு சாதாரண கிராமத்து பெண்ணான சாமந்தியின் அமைதியான வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. இதனால், அவள் தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சென்னையில் ஒரு பெரிய செல்வாக்குமிக்க குடும்பத்தின் வீட்டிற்குள் நுழையும் சாமந்தி, அங்கே இருக்கும் சிக்கலான மனிதர்களையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் எதிர்கொள்கிறாள். பல சவால்கள் குறுக்கிட்டாலும், அவளது துணிச்சலும் நேர்மையும் அவளது விதியை எப்படி மாற்றியமைக்கிறது என்பது தான் இத்தொடரின் முக்கியக் கதைக்களம்.

ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ - ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்! | Zee Tamil New Serial Chamanthi

இதற்கிடையில், ஆடம்பர வாழ்க்கையின் மீது ஆசைப்படும் சாமந்தியின் அக்கா ரோஜா, இந்த வீட்டுக்குள் மருமகளாக நுழைகிறாள். அது அந்தப் பெரிய குடும்பத்திற்குள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. குடும்ப மோதல்களுக்கு இடையே, சாமந்தியின் வாழ்க்கையில் இந்த குடும்பத்தின் மற்றொரு வாரிசான அர்ஜுன் வருகிறான். அவனது அன்பும், உறுதுணையும் சாமந்தியின் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? என்ற அடுத்தடுத்த பல அதிரடியான திருப்பங்களுடன் இந்த சீரியல் கதைக்களம் உருவாக உள்ளது.

நடிக்கும் நட்சத்திரங்கள்

சாமந்தி கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மாவும், அர்ஜுன் கதாபாத்திரத்தில் சுர்ஜித் குமாரும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும், மூத்த முன்னணி நடிகர்களான ஒய்.ஜி. மகேந்திரன், நளினி, மெட்டி ஒலி புகழ் விஷ்வா, பேரன்பு ஷமிதா, அப்சல் மற்றும் கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனால் ‘சாமந்தி’ சீரியல் ரசிகர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  

ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ - ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்! | Zee Tamil New Serial Chamanthi

வரும் ஜூலை 13 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் ‘சாமந்தி’ புதிய மெகா தொடரை உங்கள் Zee தமிழில் காணத் தவறாதீர்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *