தொகுப்பாளர் மாகாபா ஆனந்துக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம்.. விஜய் டிவி பிரபலம் சொன்ன விஷயம்

தொகுப்பாளர் மாகாபா ஆனந்துக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம்.. விஜய் டிவி பிரபலம் சொன்ன விஷயம்

மாகாபா ஆனந்த்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது பயணத்தை தொடங்கி, பின் ‘அது இது எது’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்துக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம்.. விஜய் டிவி பிரபலம் சொன்ன விஷயம் | Ramar Comedy On Makapa Anand In Cwc Show

நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கும் விதமும், போட்டியாளர்களுடன் செய்யும் நகைச்சுவைகளும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றன. அதுவும் பிரியங்காவோடு இவர் இணைந்து செய்யும் நகைச்சுவை எல்லாம் வேற லெவலில் இருக்கும்.

குக் வித் கோமாளி

தற்போது சூப்பர் சிங்கர் 11 மற்றும் குக் வித் கோமாளி 7 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதில், நேற்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி எபிசோடில், Anchor Link கொடுக்க, அட்டையில் உள்ள ஸ்பான்சர்களைப் பார்த்து படித்தார் மாகாபா.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்துக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம்.. விஜய் டிவி பிரபலம் சொன்ன விஷயம் | Ramar Comedy On Makapa Anand In Cwc Show

இதை பார்த்த விஜய் டிவி ராமர், “எனக்கு எக்ஸ்ட்ரா பேமெண்ட் எல்லாம் வேண்டாம், இந்த Scroll-ல போறத நான் பார்த்து வாசிக்கிறேன், நீ கண்ணாடி போட்டு அட்டையை பார்த்து படிக்கிறதுக்கு உனக்கு 1.5 லட்சம் ரூபாய் சம்பளம்” என மாகாபாவை பார்த்து கூற, குக் வித் கோமாளி அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்துக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளம்.. விஜய் டிவி பிரபலம் சொன்ன விஷயம் | Ramar Comedy On Makapa Anand In Cwc Show

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காம்போ மாகாபா – ராமர். இவர்கள் இருவரும் ஒரே மேடையில் வந்தால், ராமர் குறித்து வித்தியாச வித்தியாசமான கற்பனையாக கதைகளை மாகாபா சொல்லும்போது எவராலும் அவரது சிறப்பை அடக்கவே முடியாது. அப்படி நகைச்சுவையாக மாகாபா குறித்து குக் வித் கோமாளியில் ராமர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *