மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முத்து, மீனா, ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முத்து, மீனா, ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

சிறகடிக்க ஆசை

மனோஜ் – ரோகிணி விவாகரத்து பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை விவாகரத்து தரவே மாட்டேன் என சொல்லி வந்த ரோகிணி, தான் தந்த ரூ. 5 லட்சத்தை மனோஜ் திரும்ப தந்துவிட்டால் விவாகரத்து தருகிறேன் என கூறினார். இதனால் அந்த ரூ. 5 லட்சத்தை ஏற்பாடு செய்யும் முயற்சியில் மனோஜ் உள்ளார்.

மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முத்து, மீனா, ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Manoj Second Marriage In Siragadikka Aasai Serial

இந்த நேரத்தில், தனது மகள் கனகாவை திருமணம் செய்துகொண்டால் ரூ. 5 லட்சம் மட்டுமல்ல மொத்த சொத்தும் மனோஜுக்குத்தான் என கனகாவின் அம்மா கூறினார். இதனால் விவாகரத்து கிடைப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக இரண்டாம் திருமணத்திற்கு தயாராகிவிட்டார் மனோஜ்.

மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முத்து, மீனா, ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Manoj Second Marriage In Siragadikka Aasai Serial

இரண்டாம் திருமணம்

இந்த நிலையில், கனகா வீட்டில் மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன. மாப்பிள்ளையாக கழுத்தில் மாலையுடன் மனோஜ் அங்கு வர, முத்து, மீனா, ஸ்ருதி, ரவி மற்றும் ரோகிணி என அனைவரும் அந்த திருமணத்திற்கு வந்துள்ளனர்.

மனோஜின் இரண்டாம் திருமணத்திற்கு வந்த முத்து, மீனா, ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Manoj Second Marriage In Siragadikka Aasai Serial

இவர்கள் அனைவரும் அவரவர் வேலைக்காக அங்கு வந்துள்ளனர். ஆனால், யாருக்கும் மாப்பிள்ளை மனோஜ் என தெரியவில்லை. உண்மை தெரியவரும்போது எவ்வளவு பெரிய பிரச்சனை வெடிக்கப்போகிறது என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *