சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் – பவன் நிச்சயதார்த்தம்.. போட்டோக்களுக்கு குவியும் வாழ்த்து

சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் – பவன் நிச்சயதார்த்தம்.. போட்டோக்களுக்கு குவியும் வாழ்த்து

ஆர்த்தி சுபாஷ் சன் டிவியின் புகழ்பெற்ற ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் மூலம் அறிமுகமாகி, தற்போது விஜய் டிவியின் ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ தொடரில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி வருகிறது.

ஆர்த்தி சுபாஷ் நடிகர் பவன் என்பவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் ஆர்த்தி – பவன் ஜோடிக்கு இன்று கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்களை ஆர்த்தி சுபாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *