ரூ.400 கோடி ஜீவனாம்சம் வாங்கியது உண்மையா? ஹிரித்திக் ரோஷன் முன்னாள் மனைவியின் சகோதரி விளக்கம்

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் அவரது முன்னாள் மனைவி சுசான் கான் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு, சுசான் கானின் சகோதரி ஃபரா கான் அலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஹிரித்திக் ரோஷனிடமிருந்து சுசான் கான் 400 கோடி ரூபாய் ஜீவனாம்சம் பெற்றதாக இணையத்தில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஃபரா கான் அலி அளித்துள்ள பேட்டியில்:
“சுசான் கான் 400 கோடி ரூபாய் பெற்று பணக்காரியாக மாறிவிட்டார் என்று ஆன்லைனில் மக்கள் கூறுவது மிகப்பெரிய பொய். என் சகோதரி ஹிரித்திக்கிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை.”
“எங்கள் குடும்பத்தில் அம்மா, பொருள் முக்கியமல்ல, உறவுகள்தான் முக்கியம் என்று கூறித்தான் எங்களை வளர்த்தார்கள். சுசான் சுயமரியாதை உள்ள பெண், அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் விவாகரத்திற்குப் பிறகும் அவர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தற்போதும் ஒரு நல்ல தோழியாக சகஜமாக பழகி வருகிறார்.”
“மீடியாக்கள்தான் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள். ஜீவனாம்சம் எல்லாம் அவர் வாங்கவில்லை. அவரை Gold Digger என்றும் சொல்லாதீர்கள்” என ஃபரா கான் அலி மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.






