கொம்பு சீவி படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவர்தானா?

சண்முக பாண்டியன்
கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.
தைரியம், துணிச்சல், எந்த விஷயமாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம், ஆளுமை, அன்பு, இரக்க குணம் கொண்டவர் என இப்படி நிறைய விஷயங்கள் கூறலாம்.
விஜயகாந்த் அவர்களை பற்றி அவர் இருக்கும் போது இல்லாமல் மறைந்த பிறகு நிறைய நல்ல நல்ல விஷயங்களை அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படம் மூலம் நடிகராக என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் மதுர வீரன், படை தலைவன் என படங்கள் நடிக்க கடைசியாக கொம்பு சீவி படம் நடித்தார். கடந்த வருடம் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
புதிய படம்
கடந்த வருடம் கொம்பு சீவி படம் வெளியானது, அதன்பின் எந்த படங்களிலும் கமிட்டாகாமல் இருந்த சண்முக பாண்டியன் இப்போது அடுத்து படம் நடிக்க தயாராகிவிட்டார்.
அதாவது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சண்முக பாண்டியன், தீராத விளையாடடு பிள்ளை புகழ் திரு இயக்கத்தில் தான் அடுத்து நடிக்க உள்ளாராம்.
மற்ற நடிகர்கள், தொழில்நுட்க கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.






