12 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. இதன்பின் பாலிவுட் பக்கம் களமிறங்கிய இவர் வெப் தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தினார். தி பேமிலி மேன் 2, சிட்டாடல் என தொடர்ந்து இரு வெப் தொடர்களிலும் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கினார்.
இந்த வெப் தொடர்களை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சமந்தா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் தான் எங்கள் தங்கம்.
எங்கள் தங்கம்
இப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, கெளதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பின் சமந்தா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் எங்கள் தங்கம் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் ரூ. 93 கோடி வசூல் செய்துள்ளது.






