CM விஜய் செய்த காரியத்திற்காக மனதார நன்றி கூறிய சாந்தனு பாக்யராஜ்… வைரல் பதிவு

கே.பாக்யராஜ்
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா கடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
சினிமா ரசிகர்கள் கொண்டாடிய திரைக்கதை ஜாம்பவான் கே.பாக்யராஜ் அவர்கள் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை நன்றாக இருந்தவர் திடீரென இறந்துவிட்டாரே என எல்லோருமே கடும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் உள்ளனர்.
இன்று நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ், லெஜண்ட் சரவணன், நடிகை அதுல்யா, குஷ்பு என பிரபலங்கள் கே.பாக்யராஜ் அவர்கள் வீடு சென்று சாந்தனுவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சாந்தனு பதிவு
இந்த நிலையில் பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனு வெளியிட்ட பதிவில், உங்களுக்கான எனது நன்றியை 26 அல்லது 24 7க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை.
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை, மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார்.






