Heart beat சீசன் 3 எப்போது ரிலீஸ்.. அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக் குமார்

திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்கள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துவிட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு பின் தமிழிலும் பல்வேறு கதைக்களங்களில் வெப் தொடர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
Heart beat
இதில், ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கிய வெப் தொடர் தான் Heart beat. இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்ற நிலையில், 3-வது சீசன் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் Heart beat சீசன் 3 ஒளிபரப்பாக போகிறது என தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் அன்றைய தேதியில் ஒளிபரப்பப்படவில்லை. இது Heart beat வெப் தொடர் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.
அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்திக்
இந்நிலையில், Heart beat வெப் தொடரில் விஜய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீசன் 3 ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், “நாங்கள் புரோமோ படப்பிடிப்பு நடத்திவிட்டோம்; பல எபிசோட்களையும் எடுத்துவிட்டோம்; எபிசோட் ஒளிபரப்பாகும் தேதியை சேனல் தான் முடிவு செய்யும்; சேனல் மிக விரைவில் புரோமோவை வெளியிடுவார்கள், அதன் மூலம் ரிலீஸ் தேதி தெரியவரும்” என கூறியுள்ளார்.
தற்போது வெளிவரும் தகவலின்படி ஜூலை மாதம் இறுதியில் தான் Heart beat சீசன் 3 வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் குழுவிடமிருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






