மனதுக்கும் ஓய்வு தேவை.. நடிகை கயாடு லோஹருக்கு என்னாச்சு? அதிர்ச்சி முடிவு

மனதுக்கும் ஓய்வு தேவை.. நடிகை கயாடு லோஹருக்கு என்னாச்சு? அதிர்ச்சி முடிவு


டிராகன் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை கயாடு லோஹர். அவர் தற்போது தனது கைவசம் பல மொழிகளில் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார்.

துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஐ ஏம் கேம்’, தெலுங்கில் நானி ஜோடியாக ‘தி பாரடைஸ்’, தமிழில் அதர்வா ஜோடியாக ‘இதயம் முரளி’, ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக ‘இம்மார்டல்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வரும் கயாடு லோஹர், தற்போது ஒரு அதிர்ச்சியான முடிவை எடுத்திருக்கிறார். “சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன்” என அவர் அறிவித்துள்ளார்.

மனதுக்கும் ஓய்வு தேவை.. நடிகை கயாடு லோஹருக்கு என்னாச்சு? அதிர்ச்சி முடிவு | Kayadu Lohar Takes A Break From Social Media

காரணம்

தான் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகப் போவதாக கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் பதிவிட்டுள்ளதாவது:

“சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கப் போகிறேன். சில நேரம் நமது உடலுக்கு ஓய்வு கொடுப்பது போலவே, மனதுக்கும் ரெஸ்ட் கொடுக்க வேண்டி இருக்கிறது. நான் இதிலிருந்து விலகி இருந்து, என்னுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என உணர்கிறேன். அதனால்தான் இந்த முடிவு.

எனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. நான் சோசியல் மீடியாவில் சில காலம் விலகி இருந்தாலும், எனது முக்கிய அப்டேட்களை என்னுடைய டீம் இங்கே வெளியிடும். விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்” என கயாடு லோஹர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *