முதல் நாளில் வசூலை குவித்த சமந்தாவின் \”எங்கள் தங்கம்\”! மொத்தம் எத்தனை கோடி பாருங்க

முதல் நாளில் வசூலை குவித்த சமந்தாவின் \”எங்கள் தங்கம்\”! மொத்தம் எத்தனை கோடி பாருங்க


பல வருட இடைவெளிக்கு பிறகு சமந்தா மாஸ் ரோலில் நடித்திருக்கும் ‘மா இண்டி பங்காரம்’ (தமிழில் ‘எங்கள் தங்கம்’) திரைப்படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது.

உடல்நிலை காரணமாக கடந்த சில வருடங்களாகவே சமந்தா படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையிலேயே இந்த படம் அமைந்திருக்கிறது.

சமந்தாவின் கணவர் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என்பதால், சமந்தா படத்தை மிக தீவிரமாக ப்ரொமோஷன் செய்தார். தமிழ்நாட்டிலும் ப்ரொமோஷன் நிகழ்ச்சியை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் வசூலை குவித்த சமந்தாவின்

முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல்

நேற்று திரைக்கு வந்த ‘மா இண்டி பங்காரம்’ தற்போது நல்ல வசூலைக் குவித்திருப்பதாக சமந்தாவே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். முதல் நாளில் 13.15 கோடி ரூபாய் உலக அளவில் வசூலித்திருப்பது மிகப்பெரிய சாதனை என அவர் தெரிவித்திருக்கிறார்.

மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பதற்கு நன்றி கூறியிருக்கும் சமந்தா, இதற்கு முதல் நாளே அதிகம் பெண்கள் வந்து படத்தை பார்த்ததுதான் காரணம் எனக் கூறியிருக்கிறார்.

“காலம் காலமாக ஆண்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது தான் ஓப்பனிங் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். ஆனால், தற்போது பெண்கள் பங்களிப்பு காரணமாக ஓப்பனிங் வசூல் பெரிய அளவில் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என சமந்தா கூறியிருக்கிறார். 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *