மகனை ஹீரோ ஆக்கும் தனுஷ்.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என மற்ற துறைகளிலும் நடித்து தனது திறமையை நிரூபித்தவர். விவாகரத்துக்கு பிறகு தனுஷ் அவரது மகன்களை எல்லா படவிழாக்களுக்கும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
தனுஷ் மகன்கள் எப்போது சினிமாவில் அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்கிற கேள்வியும் இருந்து வந்தது. அதற்கு பதில் தற்போது கிடைத்துவிட்டது.
ஹீரோவாகும் யாத்ரா
மகன் யாத்ரா ஹீரோவாக நடிக்கும் படத்தை விரைவில் தனுஷ் இயக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மாஸ் கமர்சியல் படமாக உருவாகும் இது இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறாராம்.






