Box Office: வசூல் வேட்டையில் பிளாஸ்ட்.. மாஸ் காட்டும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்

Box Office: வசூல் வேட்டையில் பிளாஸ்ட்.. மாஸ் காட்டும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்


பிளாஸ்ட்

தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய அளவிலும் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் பிளாஸ்ட்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அர்ஜுனுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட, வெகுஜன மக்களின் மனதில் இடம்பிடித்த பிளாஸ்ட், ப்ளாக்பஸ்டர் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *