காட்டாளன் திரை விமர்சனம்

மலையாள சினிமா சமீப காலமாக பேன் இந்திய படங்களுக்கே சவால் விடும்படி வளர்ந்து வருகிறது, அந்த அளவிற்கு நிறைய நல்ல கண்டெண்ட் படங்கள் வர, அந்த வரிசையில் Raw Gangster படமாக பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் வெளிவந்துள்ள காட்டாளன் படம் எப்படியுள்ளது? பார்ப்போம்.
கதைக்களம்
மாரி(சுனில்) காட்டில் சிறு வயதிலிருந்தே யானைகளை கொன்று அதன் தந்தங்களை எடுத்து இலங்கைக்கு இல்லீகல் ஆக ஏற்றுமதி செய்து வருகிறார், இவர் தன்னை எதிர்ப்பவர், லாபத்தில் பங்கு கேற்பவர் என யாரையும் பார்க்காமல் கொன்று குவிக்கிறார்.
தன்னுடன் 40 வேட்டைக்கார்களை வைத்து இந்த தந்தங்களை கடத்துகிறார், அவர்களை மிக மோசமாக அடிமை போல் நடத்துகிறார், அப்போது எப்படியாவது மாரி-யை வீழ்த்த வேண்டும் என அந்த வேட்டையர்களில் சிலர் நினைக்கின்றனர்.
அதே நேரத்தில் மாரி-க்கு ஆப்போசிட் கேங் ஆன எடி கேங் எப்படியாவது மாரியை வீழ்த்தி கார்டல் கிங் ஆக முயற்சிக்க, அப்போது தான் நாயகன் ஆண்டனி எண்ட்ரி. அவரோ உலகில் எந்த பிரச்சனை வந்தாலும் ஒற்றை ஆளாக தீர்க்கும் ராக்கி பாய் போல் வருகிறார்.
அவரின் உதவியுடன் மாரி பல தந்தங்களை கடத்த, அந்த வேட்டைகாரர்கள் மாரி-யை வீழ்த்த ஆண்டனியிடமே உதவி கேட்க பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
காட்டில் தந்தங்களை கடத்தும் கேங்ஸ்டர், சுனில் அவருக்கு இதுபோல் கதாபாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல, மாரியாக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் புஷ்பா பாதிப்பு ஹெவியாகவே உள்ளது.
நாயகன் ஆண்டனி பேச்சு மிக குறைவு ஆனால் செயல் அதிகம் என்பது போல் அவர் தொட்டதெல்லாம் ஹிட்டு என்பது போல் மாரியின் திட்டத்தை நிறைவேற்றி கொண்டே போகிறார், அதிலும் இடைவேளை காட்சி இறந்தவர்கள் உடலில் தந்தங்களை கடத்தும் காட்சி, போலிஸ் வந்ததும் வரும் டுவிஸ்ட் என கொஞ்சம் சுவாரஸ்யம்.
ஆனால், இந்த சுவாரஸ்யம் படம் முதல் பாதி முழுவதுமே இருந்திருக்கலாம், படம் முழுவதும் ரவி பசோர் KGF ஹாங்கோவரிலேயே வாசித்து தள்ளியுள்ளார், படத்தில் உள்ளவர்களும் சிகரெட் பிடித்துகொண்டு மியூஸிக் போடுப்ப நடந்து வரேன் என்பது போல் ஸ்லோ மோஷனில் ஏதோ பேஷன் ஷோ போல் வந்து செல்கின்றனர், இதனால் முதல் பாதி எதுவுமே பெரிய சுவாரஸ்யம் இல்லை.
படத்தின் இரண்டாம் பாதி பெரிய திருப்பம் சுவாரஸ்யம் இருக்கும் என பார்த்தால் ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர், வழக்கம் போல் வெறும் பில்டப், சண்டை என்றே படம் நகர்கிறது.
குறிப்பாக எமோஷ்னல் காட்சிகள் எதுமே படத்தில் அழுத்தமாக இல்லாதது பெரிய குறை, ஸ்டெண்ட் காட்சிகளில் கொடுத்த முக்கியத்துவம் திரைக்கதையில் இருந்திருக்கலாம்.
டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், அதிலும் ஸ்டெண்ட் காட்சியில் மிரட்டியுள்ளனர் ஒவ்வொரு காட்சியமைப்பும், ரவி பசோர் இசை KGF-ல் கேட்டது போல் இருந்தால் ம் ஆங்காங்கே செம மாஸ் ஏற்றியுள்ளார்.
க்ளாப்ஸ்
படத்தின் டெக்னிக்லல் ஒர்க்
சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
பார்த்து பழகிபோன குறிப்பாக இந்த ட்ரெண்ட் ஜென் சி குறி வைக்கும் திரைக்கதை, ஆனால் அதில் சுவாரஸ்யம் இல்லை.






