ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா..

இளையராஜா
இசைத்துறையில் கடவுளாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இது இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலேயே மாபெரும் சாதனையாகும்.
இசையில் பல மேஜிக் செய்வதில் இளையராஜாவை அடித்துக்கொள்ளவே முடியாது. அப்படியொரு மேஜிக் தான் ஒரே ட்யூனில் இரண்டு பாடல்களை அமைத்தது, அந்த இரண்டு பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தீரம் தேடி ஓலம் பாடி பாடல்
மணி ரத்னம் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான திரைப்படம் ‘உணரு’. இது அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும். 1984ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் மோகன்லால், சுகுமாரன், சபிதா கே நாயர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ‘தீரம் தேடி ஓலம் பாடி’ என்கிற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலை பின்னணி பாடகி ஜானகி அவர்கள் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் பாடல்
அதே போல் தியாகராஜன் நடிப்பில் 1984ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘கொம்பேறி மூக்கன்’. இப்படத்தில் தியாகராஜனுடன் இணைந்து சரிதா, ஊர்வசி, செந்தாமரை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்கள் மட்டுமின்றி படமும் பெரிய வெற்றிபெற்றது.
இந்த நிலையில், இப்படத்தில் ‘ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்’ என்கிற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை எஸ்.பி.பி அவர்களும், ஜானகி அவர்களும் இணைந்து பாடியிருந்தார்கள். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாளத்தில் 1984ஆம் ஆண்டு ‘உணரு’ படத்தில் இடம்பெற்ற, ‘தீரம் தேடி ஓலம் பாடி’ என்கிற பாடலைத்தான் இளையராஜா கொஞ்சம் வேகப்படுத்தி இந்த பாடலை உருவாக்கி இருப்பார். ஒரே ட்யூனியில் உருவாகி, வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு மொழிகளில் வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படியொரு மேஜிக்கை இளையராஜாவை தவிர்த்து வேறு யாராலும் செய்ய முடியாது என பலரும் திரையுலகில் கூறுகின்றனர்.






