தமிழ்நாட்டில் 4 நாட்களில் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் 4 நாட்களில் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


கருப்பு 

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி. இதை தொடர்ந்து வீட்ல விசேஷம் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

தமிழ்நாட்டில் 4 நாட்களில் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 4 Days Tamilnadu Collection

இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக இயக்கப்போகும் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சூர்யாவுடன் முதல் முறையாக கருப்பு திரைப்படத்திற்காக கைகோர்த்தார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். த்ரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.



ஊர் எல்லைகளில் மக்களை காக்கும் கருப்பு சாமியை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருந்தார் பாலாஜி. அதில் ஆக்ஷன், எமோஷனல், தியேட்டர் மூவ்மெண்ட்ஸ் என அனைத்தையும் சேர்த்து தரமான கமர்ஷியல் திரைப்படமாக கொடுக்க, சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக வசூல்


இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் 4 நாட்களில் செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 62 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 4 நாட்களில் கருப்பு படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Karuppu Movie 4 Days Tamilnadu Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *