சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியும் நிலா.. யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியும் நிலா.. யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

சோழன் – நிலா

சோழன் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார் என்பதை தெரிந்து விவாகரத்து வேண்டும் என்கிற முடிவை நிலா எடுத்தார். இதன்பின் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த சமயத்தில் சோழனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார்.

சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியும் நிலா.. யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்! அய்யனார் துணை சீரியல் புரோமோ | Ayyanar Thunai Serial Upcoming Week New Promo

மீண்டும் சோழனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்த நிலா, சோழனுக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை, இவை அனைத்துமே நாடகம் என தெரிந்து உடைந்துபோனார். இறுதியில் சோழன் நிலாவின் காலில் விழுந்து கடைசியாக ஒரு வாய்ப்பு கேட்க, 6 மாதம் அவகாசம் தந்தார்.

புதிய ட்விஸ்ட்

இந்த நிலையில், நிலாவிற்கும் சோழனிற்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை நிலாவின் அம்மா, அப்பா தெரிந்துகொண்டனர். இதனால் அய்யனார் துணை வீட்டிற்கு அவர்கள் இருவரும் வந்து தங்களுடைய மகளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது, இனி அவர் சோழனுடன் சேர்ந்து வாழவேண்டிய அவசியம் இல்லை என கூறி, நிலாவை அங்கிருந்து கிளம்பும்படி கூறுகின்றனர்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியும் நிலா.. யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்! அய்யனார் துணை சீரியல் புரோமோ | Ayyanar Thunai Serial Upcoming Week New Promo

இந்த சமயத்தில் நிலா எடுக்கப்போகும் முடிவு என்ன?தனது அம்மா, அப்பா சொன்னதுபடி சோழனிடம் இருந்து மொத்தமாக பிரியப்போகிறாரா, அல்லது 6 மாதம் இந்த வீட்டில் தான் இருக்கப்போகிறேன் என கூறப்போகிறாரா என்பதை வரும் வாரம் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *