சினிமா இல்லையென்றால் இதைத்தான் செய்திருப்பேன்.. நடிகை மிர்னாலினி ரவி பேட்டி

சினிமா இல்லையென்றால் இதைத்தான் செய்திருப்பேன்.. நடிகை மிர்னாலினி ரவி பேட்டி

மிர்னாலினி ரவி

டிக் டாக், டப் ஸ்மாஷ் மூலம் ரசிகர்களை கவர்ந்து அதன்பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை மிர்னாலினி ரவி.

இவர் சூப்பர் டீலக்ஸ், கோப்ரா, ரோமியோ, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் படங்கள் நடித்து வருகிறார்.

சினிமா இல்லையென்றால் இதைத்தான் செய்திருப்பேன்.. நடிகை மிர்னாலினி ரவி பேட்டி | Mirnalini Ravi Says Would Have Settled In America

பேட்டி 

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை பயணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதில், “விளையாட்டாக ஈடுபட்ட டப்ஸ்மாஷ் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஈர்த்து, சினிமாவில் எனக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், பட வாய்ப்புகளுக்காக நான் அதை செய்யவில்லை. என் அதிர்ஷ்டம் என்னை சினிமாவில் புகுத்திவிட்டது. என்னை சினிமாவில் அனுப்ப தயங்கிய பெற்றோர்கள் எப்படியாவது நல்ல பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் என்னை அனுப்பி வைத்தார்கள்”.

சினிமா இல்லையென்றால் இதைத்தான் செய்திருப்பேன்.. நடிகை மிர்னாலினி ரவி பேட்டி | Mirnalini Ravi Says Would Have Settled In America

“என் நல்ல நேரம் என்னவென்றால், நான் வந்த புதிதில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்காததுதான். வந்த சிறிய விமர்சனங்களும் என்னை சற்று யோசிக்க வைத்தாலும், என்னை நானே தேற்றி கொள்வேன். என்னை என்ன சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன். இது என் பிளஸ் பாயிண்ட் என்று கூட நான் சொல்வேன்”.

சினிமா இல்லையென்றால் இதைத்தான் செய்திருப்பேன்.. நடிகை மிர்னாலினி ரவி பேட்டி | Mirnalini Ravi Says Would Have Settled In America

“பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும். மனதுக்கு பிடிக்கும் படங்களில் நடித்து மகிழ்ந்து கொள்கிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அதில் காதல் இருக்க வேண்டுமே தவிர, முகம் சுழிக்கும்படி இருக்கக்கூடாது. சவாலான கதாபாத்திரங்களில் தைரியமாக நடிப்பேன். ஏனென்றால் நான் எதற்கும் கவலைப்படாத ஆள். என்னை பொறுத்தவரை எனக்கு மனதில் சரி என்று பட்டதை செய்துவிடுவேன். சினிமா இல்லையென்றால் எம்.எஸ். படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்” என கூறினார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *