நடிகை ரவீனா ரவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை பிரபல இயக்குனர் தான்

நடிகை ரவீனா ரவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை பிரபல இயக்குனர் தான்


ஒரு கிடாயின் கருணை மனு படம் தொடங்கி லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரவீனா ரவி. பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன அவர் நடிகையாகவும் குறிப்பிடத்தக்க படங்களை நடித்திருக்கிறார்.

குறிப்பாக லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் அக்கா ரோலில் அவர் நடித்து அசத்தியிருப்பார். அதனை தொடர்ந்து மாமன்னன் படத்திலும் ஒரு முக்கிய ரோலில் அவர் நடித்திருந்தார்.

மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் அவர் ஏராளமான படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். கத்தி படத்தில் சமந்தா, தெறி படத்தில் எமி ஜாக்சன், இமைக்கா நொடிகள் படத்தில் ராசி கண்ணா, மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் என பல முக்கிய ஹீரோயின்களுக்கு அவர் டப்பிங் பேசி இருக்கிறார்.

நடிகை ரவீனா ரவிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை பிரபல இயக்குனர் தான் | Raveena Ravi Marriage To Valatty Director Devan

திருமணம்

இந்நிலையில் தற்போது நடிகை ரவீனா ரவிக்கு மலையாள இயக்குனர் தேவன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் Valatty என்ற மலையாள படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.



திருமணம் ஆனாலும் ரவீனா தொடர்ந்து படங்களில் நடிப்பது மற்றும் டப்பிங் பேசுவார் என அவரது அம்மா நடிகை ஸ்ரீஜா ரவி தெரிவித்திருக்கிறார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *