ராஜினாமா செய்த விஜய்! மீண்டும் வரப்போகும் தேர்தல்.. இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தான்

ராஜினாமா செய்த விஜய்! மீண்டும் வரப்போகும் தேர்தல்.. இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தான்

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி இரண்டே வருடத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்த்து இருக்கிறார். இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் விஜய் முறைப்படி முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக்கொண்டார்.

மேலும் பதவி ஏற்றதும் 200 யூனிட் இலவச மின்சாரம் பற்றிய கோப்பில் முதல் கையெழுத்து போட்டார் விஜய். வரும் 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ராஜினாமா செய்த விஜய்! மீண்டும் வரப்போகும் தேர்தல்.. இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தான் | Vijay Resign From Trichy East Constituency

ராஜினாமா

முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு விஜய் தான் போட்டியிட்டு ஜெயித்த திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியில் அவர் எம்எல்ஏ-வாக தொடர முடிவெடித்திருக்கிறார்.

சற்றுமுன் விஜய்யின் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர். அதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு சில மாதங்களில் இடைத்தேர்தல் அங்கே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜினாமா செய்த விஜய்! மீண்டும் வரப்போகும் தேர்தல்.. இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தான் | Vijay Resign From Trichy East Constituency

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *