10 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கர
போர் தொழில் படத்தின் மாபெரும் வெற்றியை பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவர் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கர. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் பாக்ஸ் ஆபிஸில் அடி வாங்கியுள்ளது.
இந்த நிலையில், 10 நாட்களை கடந்துள்ள கர திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் இப்படம் ரூ. 51.5 கோடி வசூல் செய்துள்ளது.






