விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ… இதோ

விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ… இதோ


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.

நியாயத்திற்காக வாழ்க்கையே போராட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனனியை பார்த்து பொய் சொல்கிறாய், நாடகம் போடுகிறாய் என ஏதேதோ பேசிவிட்டார் ஈஸ்வரி. அவர் உடல்நலம் தேறி மீண்டு வந்து குணசேகரனுக்கு செக் வைப்பார் என்று பார்த்தால் ஜனனிக்கு எதிராக இருக்கிறார்.

ஜனனி செய்வது தவறு, நாடகம் ஆடுகிறார் என்கிறார் ஈஸ்வரி. இப்படி சீரியல் கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்க இந்த தொடர் இயக்குனர் திருச்செல்வம் ஒரு பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ | Serial Director Thiruselvam About Vijay Tvk

என்ன அது

தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் களம் குறித்து மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தனித்து போட்டியிட்டு 108 இடங்களை பிடித்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதில் சிக்கலாகவே இருந்து வருகிறது.

ஆளுநர் 118 காட்ட வேண்டும் அப்போது தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியும் என கூறிவிட்டார். இதனால் தமிழக வெற்றிக் கழகம் மற்ற கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, தற்போது காங்கிரஸ் மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது.

விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ | Serial Director Thiruselvam About Vijay Tvk

இந்த பிரச்சனை குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வர எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தனித்துவமாக 108 தொகுதிகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். நமக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் இருக்கலாம், கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம் இவை அனைத்தும் தேர்தலுக்கு முன் பேசப்பட்டவை.

ஆனால், கள அனுபவம் இல்லையென்றாலும் பரவாயில்லை, அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானித்து விஜய்யை தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.

இப்போது அவரைத் தடுப்பது என்பது ஜனநாயக மரபு இல்லை. அது உண்மையான ஜனநாயகமும் இல்ல. அதிகாரத்தை கொண்ட அதை தடுப்பது தவறு என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *