விஜய் பற்றி பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்

விஜய் பற்றி பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் ஜெயித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது.

மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் விஜய் யாருடன் கூட்டணி சேர போகிறார் என தற்போது எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருப்பது மட்டுமின்றி திமுக-வின் ஸ்டாலின் தோல்வி பற்றியும் பேசி இருக்கிறார்.

ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது: விஜய் பற்றி பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் | Mari Selvaraj About Vijay Victory In Election

மனதை பிசைகிறது

“இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெரு வலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது.

அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள் விருப்பம் என்பதுதான் தேர்தல் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வெடித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

தான் கலந்துகொண்ட முதல் தேர்தலிலே அப்படியொரு பிரியத்தையும் எதிர்பார்ப்பையும் த.வெ.க தலைவர் விஜய் சார் அவர்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவ இருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மக்கள் பணி சிறக்கட்டும். 

இவ்வாறு மாரி செல்வராஜ் பதிவிட்டு உள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *