பிளாக்பஸ்டர் பில்லா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

பிளாக்பஸ்டர் பில்லா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

பில்லா 

தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணி அஜித் – விஷ்ணுவர்தன். இவர்கள் இருவரும் இணைந்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றன.

இதில், இன்று வரை அஜித் ரசிகர்கள் இடையே டாப் 5-ல் இருக்கக்கூடிய திரைப்படம் பில்லா. ரஜினி நடித்த பில்லா திரைப்படத்தின் ரீமேக் என்றாலும், அஜித் தன்னுடைய ஸ்டைலான, மாஸான நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் ரஹ்மான், நமிதா, பிரபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ரீ-ரிலீஸ்

2007ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் வேட்டையாடிய பில்லா திரைப்படம், மீண்டும் 19 ஆண்டுகளுக்கு பின் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.திரையரங்குகளில் ரீ-ரிலீஸான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், ரீ-ரிலீஸில் பில்லா செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 32 லட்சம் வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *