சின்ன தம்பி உன்னை நம்பி.. விஜய்க்கு இளையராஜா ஆதரவா? பாடலை பகிர்ந்தது ஏன்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேடி எண்ணப்பட இருக்கிறது.
நடிகர் விஜய்யின் தவெக எத்தனை இடங்களை ஜெயிக்க போகிறது என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
233 தொகுதிகளில் நேரடியாக தவெக வேட்பாளர்கள் போட்டியிட, எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு அறிவித்தார். இதில் எத்தனை தொகுதிகளில் விஜய் ஜெயிக்க போகிறார் என்பது மே 4ம் தேதி தெரிந்துவிடும்.
இளையராஜா வெளியிட்ட பாடல்
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தற்போது தனது youtube சேனலில் “இது எங்கள் நீதி” படத்தில் வரும் “சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் சின்ன வயதில் ராதிகா உடன் நடித்த இந்த பட பாடலை தேர்தல் ரிசல்ட் நேரத்தில் இளையராஜா வெளியிட்டு இருப்பது இணையவாசிகள் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
விஜய்க்கு இளையராஜா ஆதரவு தெரிவிக்கிறாரா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.






