பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்?

பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்?


பிரபல பாடகியாக இருந்த ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார் என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அது GV பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் இல்லை என மறைமுகமாக ஹிண்ட் கொடுத்துள்ளார்.

அதனால் தான் நான் சினிமாவே வேண்டாம் என சொல்லி சென்னையில் இருந்து வெளியேறி ரிஷிகேஷில் செட்டில் ஆகிவிட்டதாக கூறி உள்ளார். அங்கு அவர் 6 வருடமாக துணி வியாபாரம் செய்து வருகிறார்.

பிக் பாஸ் புகழ் மாயாவின் அக்கா தான் ஸ்வாகதா என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்? | Tamil Music Director Abused Me Swagatha Krishnan


இசையமைப்பாளர்

சினிமாவில் பாட வேண்டும் என வாய்ப்பு தேடிய போது, 100 கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடி இருக்கிறேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயங்களும் நடந்தது. அதை செய்திருந்தால் இப்போது பெரிய இடத்தில் இருந்திருப்பேன். எனக்கு திறமை இருக்கிறது என முயற்சித்து வாய்ப்பு தேடினேன்.

அப்படி கஷ்டப்பட்டு பெற்ற இடத்தை விட்டுவிட்டு வர ஒரு இசையமைப்பாளர் தான் காரணம்.

நான் ஒரு கொடூரமான sexual abuse victim. அவரிடம் இருந்து தப்பித்து தான் ரிஷிகேஷ் வந்துவிட்டேன். இது பற்றி யாருக்கும் தெரியாது. அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை.


எனது 9 வருட காதல் பிரேக் அப் ஆனது. அதில் இருந்து மீண்டு வர கஷ்டமாக இருந்தது. அப்போது அந்த இசையமைப்பாளரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன்.


அந்த நேரத்தில் அவர் என்னை கண்ட்ரோல் எடுக்கிறார். அவர்து குடும்பம், நண்பர்கள் என எல்லோரிடமும் அறிமுகப்படுத்துகிறார்.

பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்? | Tamil Music Director Abused Me Swagatha Krishnan


அதன் பின் என் சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். தன்னிடம் காசு இல்லை என சொல்லிக்கொண்டே இருப்பார். நான் சேர்த்து வாங்கிக்கொள்கிறேன் என கூறினேன். அவரது மனைவிக்கு ஐபோன் வாங்கி கொடுக்க கூட என்னிடம் கடன் வாங்கி இருக்கிறார்.

ஒரு சொத்து விற்ற பணம் என்னிடம் இருக்கிறது என அவரிடம் சொன்னபோது. அந்த பணத்தை சில காரணங்கள் சொல்லி வாங்கிக்கொண்டு வட்டியுடன் தருவதாக கூறினார். அதை வைத்து வீடு, சொகுசு கார் என வாங்கினார்.

நான் பாட சில பாடல்களும் கொடுத்தார். இதை எல்லாம் அவரும் குடும்பமும் சேர்ந்து தான் செய்தார்கள்.

தவறாக நடந்தார்..

7 வருடத்திற்கு முன் திடீரென் ஒரு நாள் ஸ்டுடியோவில் என்னை பலவந்தப்படுத்தி தவறாக நடந்தார். அதை சிசிடிவி கேமராவில் ரெக்கார்டு செய்து கொண்டார்.

வெளியில் செல்ல கூடாது என சிசிடிவி ரெக்கார்டை வைத்து பிளாக்மெயில் செய்தார். எல்லோருக்கும் காட்டிவிடுவேன் என மிரட்டினார். சவுண்ட் ப்ரூப் ரூமில் அது நடந்தது. பல சீக்ரெட் கேமரா வைத்து இருந்தார்.


என்னைப்பற்றி தவறாக தகவல் பரப்பினார். அவரது மனைவியையும் பேசி ஏமாற்றினார்.

இது போல பல பெண்களை வீடியோ எடுத்து அவர் பார்த்து கொண்டிருப்பார். குழந்தைகளையும் பார்த்துக்கொண்டிருப்பார். அமெரிக்காவில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பற்றி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் ராஜா மெட்ராஸில் இருக்கிறார்.

மிரட்டல்

கோடிக்கணக்கில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், நான் சவுண்டு கார்டு திருடிவிட்டேன் என பொய்யாக குற்றம் சாட்டுகிறார். போலிஸில் புகார் அளிக்க தைரியல் இல்லை.

இதே போல ஒரு பெண்ணிடம் மீண்டும் நடந்து இருக்கிறார். அந்த பெண் எனக்கு மெசேஜ அனுப்புகிறார். அபார்ஷன் செய்து இருக்கிறார். இதற்கெல்லாம் அவரது மனைவியும் உடந்தையாக இருக்கிறார்.

இப்படி ஒருவனுக்கு அவார்டுகள் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் வேலைக்கு அவர் விருது வாங்குகிறார். அவருக்கு பியானோ கூட வாசிக்க தெரியாது.

காலில் விழுந்தார்

என்னை அப்படி செய்துவிட்டு அதன்பின் என் வீட்டில் வந்து காலில் விழுந்தார். புகார் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார்.

என் சகோதரி மாயா தான் என்னை காப்பாற்றினார்.

பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்? | Tamil Music Director Abused Me Swagatha Krishnan

யார் அந்த இசையமைப்பாளர்?

GV பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் இவர்கள் எல்லாம் வேற லெவலில் ப்ரொபஷ்னல் ஆக இருப்பவர்கள் என ஸ்வாகதா கூறியுள்ளார்.

அதனால் இந்த லிஸ்ட்டில் இல்லாத ஒருவர் தான் ஸ்வாகதாவிடம் இப்படி நடந்திருப்பதாக தெரிகிறது. யார் அந்த இசையமைப்பாளர்?
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *