தீபிகா படுகோன் கர்ப்பம்.. ராக்கா ஷூட்டிங் என்ன ஆகும்? அட்லீ எடுத்த முடிவு

அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை லேட்டஸ்ட் ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அட்லீ ஷூட் செய்து வருகிறார்.
மும்பையில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தின் அல்லு அர்ஜுனுக்கு இணையாக நடிகை தீபிகா படுகோனுக்கும் முக்கியத்தும் இருக்கிறதாம்.
சமீபத்தில் தீபிகா தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அதனால் ராக்கா படத்தின் ஷூட்டிங் என்ன ஆகும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அட்லீ முடிவு
தீபிகா கர்பத்தை அறிவித்தாலும் அவரது காட்சிகளை எதுவும் குறைக்கப்படவில்லையாம். சண்டை காட்சிகளை மட்டும் பாடி டபுள் வைத்து படமாக்க அட்லீ முடிவெடுத்து இருக்கிறாராம்.
மற்ற காட்சிகளில் தீபிகா படுகோனே நடிப்பாராம்.






