உண்மையை கண்டுபிடித்த கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ

சன் டிவியின் கயல் சீரியலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனந்தியின் திருமணத்தை சுற்றி தான் தற்போது கதை பல மாதங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த திருமண ட்ராக் எப்போது தான் முடியும் என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு ஜவ்வாக தான் சென்றுகொண்டிருக்கிறது.
ஆனந்தி தனது காதலை பற்றி வீட்டில் சொல்வாரா? அல்லது கயல் நினைப்பது போல நிச்சயம் ஆன திருமணம் நடக்குமா என குழப்பம் நீடித்து வருகிறது.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாட்சி அம்மாள் வீட்டுக்கு வந்து திருமண பத்திரிகையை கொடுத்து கயலுக்கு ஷாக் கொடுக்கிறார்.
மறுபுறம் ஆனந்தி மற்றும் ஷாலினி நடந்து கொள்ளும் விதம் கயலுக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை பற்றி கயல் கேட்டுவிடுகிறார். “வெளிவரப்போகும் உண்மை” என ப்ரோமோவிலேயே குறிப்பிட்டு உள்ளனர். அதனால் ஆனந்தி பற்றிய எல்லா தகவலும் இந்த வாரம் குடும்பத்திற்கு தெரிய வரும் என தெரிகிறது.
ப்ரோமோவை பாருங்க.






