‘வயது ஒரு தடையில்லை’.. நடிகை ஸ்ரேயா சரண் ஓபன் டாக்

நடிகை ஸ்ரேயா
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக என்றும் இருப்பவர் நடிகை ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். இதன்பின், வெளிவந்த மிராய் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
வயது ஒரு தடையில்லை
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையில்லை என ஸ்ரேயா சரண் பேசியுள்ளார். இதில், “திருமணம் ஆனவுடன் நடிகைகள் முடிந்துவிடுகிறார்கள் என்ற மனப்போக்கு தவறு. சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையில்லை. திறமைதான் முக்கியம். நல்ல கலைஞர்கள் எந்த வயதிலும் சாதிக்க முடியும்” என கூறியுள்ளார்.






