துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்

துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்


துரந்தர் 2

இந்த ஆண்டு இந்திய சினிமாவிலிருந்து இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை துரந்தர் 2 படைத்துள்ளது. கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளிவந்த இப்படம் இதுவரை ரூ. 1650 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் | Dhurandhar 2 Ott Release Update



மாபெரும் வெற்றிபெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், திரையரங்கில் வெற்றிகரமாக துரந்தர் 2 திரைப்படம் ஓடிக்கொண்டு இருப்பதால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி ரிலீஸ் குறித்து இதுவரை வாயை திறக்கவில்லை.

ஓடிடி



குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தி திரைப்படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸாகி விடுகின்றன. ஆனால், பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தி திரைப்படங்கள் 8 வாரங்களுக்கு பின்தான் ஓடிடியிலேயே வெளியாகிறது. துரந்தர் முதல் பாகமும் அப்படித்தான் ரிலீஸ் செய்யப்பட்டது.

துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் எப்போது? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள் | Dhurandhar 2 Ott Release Update

ஆனால், தற்போது துரந்தர் 2 திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால், கண்டிப்பாக ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் குறித்து எப்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறது என்று. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *