ஏன் நான்லாம் போயஸ் கார்டன் வீடு பத்தி பேச கூடாதா.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ்

நடிகர் தனுஷ் இதற்க்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “ஏன் நானெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்க கூடாதா” என பேசி இருந்தார். அது அப்போது மீம் ஆக மாறி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.
பல விதமாக நெட்டிசன்கள் தனுஷ் பேசியதை வைத்து கலாய்த்தார்கள். இந்நிலையில் இன்று நடந்த கர படத்தின் விழாவில் பேசும்போது தனுஷிடம் அந்த மீம்கள் பற்றி தொகுப்பாளர் RJ விஜய் கேள்வி எழுப்பினார்.
பதிலடி
அதற்கு பதில் சொன்ன தனுஷ் “அதை எப்படி எடுத்துக்கொள்வோம் என்பது நம் கையில் தான். நான் ஏர்போர்ட் செல்லும்போதும் பஸ் டிரைவர் என்னிடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார். போட்டோ எடுத்தபின் ஒரு விஷயம் சொன்னார்.”
“தம்பி நான் யாரிடமும் செல்பி கேட்டதில்லை. உங்களிடம் தான் முதல் முறை எடுத்துக்கொள்கிறேன். அதற்கு காரணம். நீங்க போயஸ் கார்டன் வீட்டை பற்றி பேசியது என் மகனுக்கு motivation ஆக இருக்கிறது. அவன் inspire ஆகி பயங்கரமாக வேலை செய்கிறான் என கூறினார்.”
“அதனால் inspiration ஆக எடுத்துக்கொள்ளலாம். அல்லது மீம் மெட்டிரியல் ஆக மாறினாலும்.. அது entertainment தான். அது தானே நம் வேலை. அதுவும் ஓகே தான்.”
“ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதானு சொல்ல கூடாதா?” என தனுஷ் மீண்டும் அதே பாணியில் பேசி இருக்கிறார்.
— Amuthabharathi Videos (@videos3210) April 19, 2026






