கங்கனா சூனியக்காரி என புகார் அளித்த முன்னாள் காதலர்.. பிளாக் மேஜிக் சர்ச்சை பற்றி நடிகை பதில்

கங்கனா சூனியக்காரி என புகார் அளித்த முன்னாள் காதலர்.. பிளாக் மேஜிக் சர்ச்சை பற்றி நடிகை பதில்

நடிகை கங்கனா ரணாவத் தற்போது நடிகை மட்டுமின்றி எம்பி ஆகவும் இருந்து வருகிறார். அவர் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு எப்பி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கங்கனா ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். தாம் தூம் படம் தொடங்கி சந்திரமுகி 2 படம் வரை அவர் நடிப்பால் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் தான்.

கங்கனா சூனியக்காரி என புகார் அளித்த முன்னாள் காதலர்.. பிளாக் மேஜிக் சர்ச்சை பற்றி நடிகை பதில் | Kangana Ranaut On Black Magic Allegation

சூனியக்காரி

தனது முன்னாள் காதலர் தன்னை சூனியக்காரி என சொன்னதால் சந்தித்த பிரச்சனைகள் பற்றி தற்போது பேட்டியில் பேசி இருக்கிறார் கங்கனா. பல வருடங்களுக்கு முன்பு அவரது முன்னாள் காதலரை கங்கனா தவறாக நடத்தியதாகவும் தாக்கி துன்புறுத்தியதாகவும் புகார் அளித்தார். கங்கனா சூனியம் மற்றும் பிளாக் மேஜிக் செய்கிறார் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

அந்த புகாருக்கு பிறகு கங்கனா கடுமையான ட்ரோல்களை சந்தித்தார்.

“எனக்கு அப்போது 26 அல்லது 27 வயது இருந்திருக்கும். நான் ரத்தம் குடிப்பேன், பிளாக் மேஜிக் செய்வேன் என்றும் செய்தி பரப்பினார்கள்.”

அந்த கடினமான நேரத்தில் நான் கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி, குயின் படத்தின் மூலம் ஹிட் கொடுத்தேன் என கங்கனா கூறியுள்ளார்.
 
கங்கனா சூனியக்காரி என புகார் அளித்த முன்னாள் காதலர்.. பிளாக் மேஜிக் சர்ச்சை பற்றி நடிகை பதில் | Kangana Ranaut On Black Magic Allegation

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *